உலோகருசி

    578

    “தமிழ்க் கவிதையுலகின் தொண்ணூறு சதமானத்தைக் கைப்பற்றி கோலோசுபவை காதல் சார்ந்த மிகைநவிற்சிக் கவிதைகள் அல்லது காமத்தின் அதீதத்தை அல்லது காம ஒடுக்குதலை, உரைக்கும் உடல், கூடல், ஊடல், சாடல் கவிதைகள்.  அந்நியத்தன்மையின், அலுப்பின், ஒவ்வாமையின், ஒட்டாமையின் நகல்களைப் பெருக்கும் நவீன வாழ்வை இன்றைய கவிதைகள் நுட்பமாகக் கவனிப்பதாகத் தெரியவில்லை.  பண்டைய காதலும் தமிழ் சினிமா பேசிப் பேசி அலுத்த காதலும் அல்லது வேறொரு தளத்தில் உடல் கிளர்ந்த வெளிப்படைக் காமமுமே அதிகம் தமிழில் பேசப்படுகின்றன.  இவற்றிலிருந்து விலகிச் சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை, இன்றைய  வாழ்வு தரும் உள நெருக்கடியை, பொய்மையாய்த் துலங்கும் நிஜத்தை, காதலை, மெல்லப் படர்ந்துவரும் வாழ்வின் நகல் ‍- போலியாக மாறிவிட்ட பிளாஸ்டிக் தன்மையைப் பெருந்தேவியின் இக்கவிதைகள் காட்டிக் கொடுக்கின்றன.  வாழ்வின் ‘உண்மைகளைச்’ சொல்வதையோ அவற்றைச் சுட்டிக்காட்டி வாசிப்பாளரை ஏற்க வைப்பதையோ இக்கவிதைகள் செய்யவில்லை.  உடன்பாட்டுநிலையில் இல்லாமல் கொடுக்கப்பட்ட ‘உண்மைகளாக’ நம்பப்படுவனவற்றை விமர்சனத்திற்கு உட்படுத்துவதாக அமைந்திருக்கின்றன என்பதே இக்கவிதைகளின் முக்கியத்துவம்.   வாசிப்பாளனின் தன்னடையாளத்தை விமர்சிப்பதாக, அவன் உணர்வுகளை எள்ளலுக்கு உட்படுத்துவதாக உள்ளன இக்கவிதைகள்.  அதாவது, தினசரி புழங்கக்கூடிய சொற்களின் மற்றும் பொருட்களின் மீது இருத்தப்பட்டுள்ள உணர்வைச் சிதைத்து மாற்றுபவையாக இவை உள்ளன.”