யானேயாகி

இருபத்தைந்து  வருடங்களாக கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வரும் பெருந்தேவி கும்பகோணம் அருகே கோடாலிக் கருப்பூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது அமெரிக்காவில் சியனா கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.  ஆல்பனியிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் வசிக்கிறார்.

பெருந்தேவியின்  எட்டு கவிதைத் தொகுப்புகள், பின் அமைப்பியல், பெண்ணியம் சார்ந்த ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகியவை வெளிவந்திருக்கின்றன. ஒரு இலக்கியத் திறனாய்வுக் கட்டுரை நூலையும் தொகுத்திருக்கிறார். சமீபத்தில் (2020, ஆகஸ்ட்) அவருடைய ஒரு குறுங்கதைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது.

அவரது உறுதுணை வாக்கியம்:

“We must not wish for the disappearance of our troubles but for the grace to transform them.” (Simone Weil)