Part of the கவிதை series:
- இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கீழே விழாதிருப்பது முக்கியம்
- விளையாட வந்த எந்திர பூதம்
- பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்
- வாயாடிக் கவிதைகள்
- அழுக்கு சாக்ஸ்
- உலோகருசி
- இக்கடல் இச்சுவை
- தீயுறைத்தூக்கம்
பிறப்புறுப்பு இருக்கும் கடவுள் என் கவிதையை வாசிக்க நேர்ந்தால் அவருக்கு உடனடியாகக் கெட்ட வார்த்தைகளோடு அதைப் புணரத் தோன்ற வேண்டும். பின் அதிலிருந்து ஒரு உலகம் பிறக்கும் திரைகளற்று, வெறுப்பற்று, பொறுப்பற்றுத் தன்னைக் கடவுள் நீக்கிக்கொள்ளாத ஒரு இடம். ஆனால் கடவுளுக்குப் பிறப்புறுப்பு உண்டா இல்லையா எனத் தெரிந்துகொள்ள முடிவதே இல்லை. என் கவிதைக்கு இழைக்கப்பட்டிருக்கும் ரகசிய அநியாயங்கள் இதிலிருந்து தொடங்குகின்றன.