எழுத்தைப் பகிரும், நிகழ்த்தும் நோக்கத்தில் மாத்திரமின்றி அதைப் பயிலும் வழியிலும் என் இணையதளத்தைத் தொடங்கியிருக்கிறேன். வாசகர்களை இந்த இணையதளம் ஏமாற்றாது என்று நம்புகிறேன். எழுதுவதை வாரம் இரு நாட்கள் பகிர உத்தேசம். குறுங்கதைகளும் சிறுகதைகளும் கட்டுரைகளும் கவிதைகளும் இத்தளத்தில் இடம்பெறும். தேர்ந்தெடுத்த சில நண்பர்களுக்கும் ஒரு களமாக இணையதளம் விரிய வாய்ப்பிருக்கிறது.