‘காஞ்சனை:’ நவீனத் தன்னிலையின் அல்லாட்டம்
புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் என்னை மிகவும் ஈர்த்தது ‘காஞ்சனை’ சிறுகதைதான். அந்தச் சிறுகதைக்கு என் வாழ்வில் முக்கிய இடமுண்டு. 1995-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தக் கதையைப் பற்றி கலை இலக்கிய விமர்சகரும் கோட்பாட்டாளருமான...
மகாமசானம்
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பன் வீட்டுக்கு வந்திருந்தான். சமீபத்தில் நான் வாசித்த ஒரு தமிழ்ப் புதினம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த ஆக்கம் பெரிதாக என்னைக் கவரவில்லை. ஏனெனில், மொழிவளத்தைக் கையாளும் விவரணைகளில்...
‘கபாடபுரம்’ என்னும் மிகுபுனைவும் கர்ப்பேந்திரமும்
பயன் கருதாது, தன்மயமாகி, லயித்து, ஒட்டிப் புளுகுவதுதான் கதை.” (சிறுகதை மறுமலர்ச்சிக் காலம், முல்லை (10), 1946) - புதுமைப்பித்தன்
“இந்த வாழ்க்கை அவ்வளவு லேசான கட்டுக்கோப்பில் சிருஷ்டிக்கப்படவில்லை. தர்க்கத்தின் பிரியமான அந்தரங்கமான கொள்கைகளைச்...
காதலின் சொரூபமாகும் பெண் தன்மை: புதுமைப்பித்தனின் ‘ஆண்மை’ சிறுகதை
(courtesy: "The art of waiting," ignant.com)
புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் ஒன்றான ‘ஆண்மை’யின் தலைப்பே நகைமுரண். கதையின் நாயகன் ஒரு கோழை. அதாவது, நம் ஊரில் இன்றளவும் ஆண்மை, ஆண்மை என்று பறைசாற்றுகிறார்களே அது...
‘பிரபுலிங்கலீளை என்னும் அக்குமாதேவி சரித்திர நாடகம்:’ சரணர்களும் சமணர்களும்
தென்னிந்தியப் பகுதியில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் பசவண்ணரின் சைவ பக்தி இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவருமான அக்கமகாதேவி அவரது செறிவான, அழகியல்கூடிய வசனங்களுக்காக அறியப்பட்டவர் (1). அதே நேரத்தில் ஒரு பெண்ணாக கடுமையான, இன்றுவரையிலும்கூட...
ஆர்.சிவக்குமாரின் ‘உருமாற்றமும்’ மொழிபெயர்ச் சார்பும்
தற்காலத்தில் தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளராகத் திகழும் திரு ஆர். சிவக்குமாரின் ‘உருமாற்றம்’ கதையை முன்வைத்து மொழிபெயர்ப்பு சார்ந்த சில கருத்தாக்கங்களைப் பகிர நினைக்கிறேன். முதலாவது மொழிபெயர்ப்பு என்ற பயன்பாட்டைவிட மொழிபெயர்த்தல் என்ற பயன்பாடு...
தன்னில் அமிழ்ந்து தன்னை அழித்தல்: அபியின் கவிதைகள்
அபியின் கவிதைகள் பொதுவாக நான் வாசிக்கும் கவிதைகளிலிருந்தும் எனக்குரிய கவிதைப் பாணிகளிலிருந்தும் மாறுபட்டவை. பல வகைகளில் எழுதப்படுவது கவிதை என்ற வகையில் கவிதைக்கே உரித்தான பன்மைத்தன்மையின் சிறப்பு இவற்றைப் படிக்கையில் மீண்டும் உறுதிப்பட்டது.
(நிழற்படத்துக்கு...
காதல்-காத்திருத்தல்
காதலைப் பற்றி எழுத நினைக்கும்போதே உடனடியாக மனதில் தோன்றும் பிம்பம் காத்திருப்பவளின் / காத்திருப்பவனின் பிம்பம். காத்திருத்தலின் செறிவான சித்திரங்களைத் தமிழ் அக இலக்கியம் நமக்குக் காட்டித் தந்திருக்கிறது. பொதுவாக, காத்திருத்தல் எனும்...
மழையின் வீடு
”மனிதனொருவன் உலகத்தை வரைய நினைத்தான். வருடங்கள் செல்ல, வெளியொன்றில் மாகாணங்கள், ராச்சியங்கள், மலைகள், குடாக்கள், கப்பல்கள், மீன்கள், அறைகள், உபகரணங்கள், நட்சத்திரங்கள், குதிரைகள், ஆள்கள் என்று உருவங்களை இட்டு நிரப்பினான். தான் இறப்பதற்குச்...
‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ தொகுப்பில் என் முன்னுரை
வாசல்
இந்தத் தொகுப்பிலிருக்கும் குறுங்கதைகள் எல்லாம் இவ்வருடத்தின் (2020) மே மாதத்திலிருந்து தொடங்கி ஜூலை வரையில் கிடைத்த கால அவகாசத்தில் எழுதப்பட்டவை. கொரோனாவின் பிடியில் உலகமே ஸ்தம்பித்துக் கிடக்கும்போது புனைவில் என்னை விரும்பித் தொலைத்த...