சிலுவை 

எப்போதாவது
சிலுவையின் திறந்த கைகளுக்கு
நான் கண்ணீரோடு திரும்புவேன்

எப்போதாவது
சிலுவையின் பாதத்தில்
மண்டியிட்டு விழுவேன்

சிலுவையை
மணம்புரியாதிருப்பது சிரமம்:
எப்படி அவள் தன் கைகளில் என்னை ஏந்தியிருக்கிறாளெனப்
பார்த்தீர்களா?

இன்றோ
நாளையோ
நாளை மறுநாளோ நடக்காது அது
ஆனால்
நடக்கவேண்டிய விதத்தில் நடக்கும்

இப்போதைக்கு சிலுவை ஒரு ஆகாய விமானம்
தன் கால்களை அகட்டும் ஒரு பெண்

 

இப்போது நேரமென்ன?

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பவன்
சில நொடிகள் விழித்து –
மரணப் படுக்கையைச் சுற்றி நடந்த மந்திர ஜாலத்தால்
சுதாரித்துக்கொண்டது போல –
இப்போது நேரமென்ன என்று
உறவினர்களிடம்
அவர்கள் மயிர்க்கூச்செரியக் கேட்கும்போது
என்னமோ தப்பாக இருக்கிறதென அர்த்தம்
என்னமோ தப்பாக இருக்கிறதென அர்த்தம்
என்னமோ தப்பாக இருக்கிறதென அர்த்தம்