Perundevi

31 POSTS 0 COMMENTS

தீபாவளிக்கான சிறப்புச் சிறுகதை

0
வாசிக்க சுட்டியைச் சொடுக்கவும். https://uyirmmai.com/literature/short-story/tamil-short-story-by-perundevi-2/?fbclid=IwAR1ka3rPUEwe5lrgfIlDdRmuOf6GlqicuImXyKMwveXPk9IrolavHSPYNl4   சென்ற ஜூலையில் மறைந்த எழுத்தாளர் சா.கந்தசாமியின் ஒரு சிறுகதை (”பாய்ச்சல்”) எனக்கு ரொம்பப் பிடித்தமானது. அவர் இறந்தபோது அந்தக் கதையை மனதில் வைத்துக்கொண்டு ஒரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன்....

‘கௌரவக்கொலை:’ மாற்றுச் சொல்லாடலுக்கான தேவையும் பால் தன்னிலைகளும்

பகுதி ஒன்று:  'கௌரவக் கொலை' என்னும் மொழிப் பயன்பாடு தமிழகத்தில் காதலுறவு மற்றும் மணவுறவு சார்ந்து  பட்டியலினத்தவருக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறை மற்றும் படுகொலைகள் பற்றிய சொல்லாடல்களை இரு பகுதிகளில் விவாதிக்கிறது...

‘கபாடபுரம்’ என்னும் மிகுபுனைவும் கர்ப்பேந்திரமும்

பயன் கருதாது, தன்மயமாகி, லயித்து, ஒட்டிப் புளுகுவதுதான் கதை.” (சிறுகதை மறுமலர்ச்சிக் காலம், முல்லை (10), 1946) - புதுமைப்பித்தன் “இந்த வாழ்க்கை அவ்வளவு லேசான கட்டுக்கோப்பில் சிருஷ்டிக்கப்படவில்லை. தர்க்கத்தின் பிரியமான அந்தரங்கமான கொள்கைகளைச்...

வெளியே குருவியைப் பார்த்து நாட்களாகிவிட்டது

0
மூன்றாவது கிளாஸ் ஒயினில் குளிர் இரவை மூழ்கடிக்கிறேன் ஜன்னலுக்கு வெளியே பார்க்கிங்கில் ஒரு கார் என் பக்கத்து அபார்ட்மெண்டில் வசிப்பவன் அந்தப் பெண்ணை இதற்குமுன் பார்த்ததில்லை அவனைவிடக் குள்ளம் இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் அந்தப் பெண் கையை ஆட்டி ஆட்டிப் பேசுகிறாள் கத்துகிறாள் கண்ணாடி அறைந்த...

பாப் சாந்தி

0
Odilon Redon, “The Smiling Spider,” 1887   கதவுக்கு வெளியே யாரோ ஸ்விட்சில் வைத்த கையை எடுக்காமல் ஒலிக்கவிட்டிருந்த அழைப்பு மணியின் தொடர் நாராசம் தாங்காமல், பாதிக் குளியலில் வேகவேகமாக நைட்டியை அணிந்தவாறு பாத்ரூமிலிருந்து...

‘காஞ்சனை:’ நவீனத் தன்னிலையின் அல்லாட்டம்

புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் என்னை மிகவும் ஈர்த்தது  ‘காஞ்சனை’ சிறுகதைதான். அந்தச் சிறுகதைக்கு என் வாழ்வில் முக்கிய இடமுண்டு. 1995-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தக் கதையைப் பற்றி கலை இலக்கிய விமர்சகரும் கோட்பாட்டாளருமான...

காதலின் சொரூபமாகும் பெண் தன்மை: புதுமைப்பித்தனின் ‘ஆண்மை’ சிறுகதை

(courtesy: "The art of waiting," ignant.com) புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் ஒன்றான ‘ஆண்மை’யின்  தலைப்பே நகைமுரண். கதையின் நாயகன் ஒரு கோழை. அதாவது,  நம் ஊரில் இன்றளவும் ஆண்மை, ஆண்மை என்று பறைசாற்றுகிறார்களே அது...

நிகனோர் பர்ரா (3)

0
இக்கவிதை 1963இல் பிரசுரிக்கப்பட்டது. எதிர்கவிதையின் கொள்கை விளக்கமென்று சொல்லத்தக்க வகையில் அமைந்திருக்கும் கவிதை இது. தந்த கோபுரத்திலிருந்தும் இறை நிலையிலிருந்தும் கவிஞர்கள் இறங்கிவர வேண்டியதை எடுத்துரைக்கும் கவிதை இது.   கொள்கை விளக்க அறிக்கை சீமான்களே, சீமாட்டிகளே இது...

நிகனோர் பர்ரா (2)

0
சிலுவை  எப்போதாவது சிலுவையின் திறந்த கைகளுக்கு நான் கண்ணீரோடு திரும்புவேன் எப்போதாவது சிலுவையின் பாதத்தில் மண்டியிட்டு விழுவேன் சிலுவையை மணம்புரியாதிருப்பது சிரமம்: எப்படி அவள் தன் கைகளில் என்னை ஏந்தியிருக்கிறாளெனப் பார்த்தீர்களா? இன்றோ நாளையோ நாளை மறுநாளோ நடக்காது அது ஆனால் நடக்கவேண்டிய விதத்தில் நடக்கும் இப்போதைக்கு சிலுவை ஒரு ஆகாய விமானம் தன் கால்களை அகட்டும்...

சரஸ்வதி

0
இன்று சரஸ்வதிக்கான திருநாள். சொல்லில் ஒலியில் எழுத்தில் படிப்பில் கலையில் ஈடுபட்டுத் திளைப்பவர்களுக்கான நாள்.  தெய்வத்துக்கு அப்பால், அப்படியொன்று இருந்தால், மொழியின் குறியீட்டுத்தளத்தில் குறியும் பொருளும் பிணைந்தும் பிரிந்தும் இயக்கம்கொள்வதை நினைவுகூரவும் ஒரு...

உரையாட

திசைமாறுகிறதா பாலியல் குற்றச்சாட்டுக்கான பொறுப்புக் கோரல்?

0
கோணங்கி மீதும் நாடகக் கலைஞர்கள் மீதும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி சீனிவாச ராமாநுஜம் அருஞ்சொல் மின்னிதழில் எழுதியிருக்கும் பதிவைப் படித்தேன். சுட்டி:  https://www.arunchol.com/srinivasa-ramanujam-on-writer-brahmins?fbclid=IwAR3iK7XPmyMFmvXJ0-49PGRcQoNFEh7qzeKn5Qpu5YBcgPcGfgtJzZebSQI ராமாநுஜம் எழுதியிருக்கும் பதிவின் தலைப்பு, பதிவின் புதிய ’கண்டுபிடிப்பு.’ இரண்டும்...

கோணங்கி விவகாரத்தில் இலக்கிய எழுத்தாளர்களின் தரப்புகள்

0
கோணங்கியின் மீது பல இளைஞர்களாலும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் வன்முறை புகார்களுக்கு  இலக்கியவாதிகள் முன்வைத்திருக்கும் எதிர்வினைகள் அவருக்கு வெளிப்படையான, மறைமுகமான ஆதரவாகத் தொனிக்கிறது. குறிப்பாக ஜெயமோகன். இந்த எதிர்வினைகளில், ஜெயமோகனின் கட்டுரையில், நான் ஒன்றுபடும்...

‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்:’ இந்து தமிழ் திசை மதிப்புரை

0
எனது ’ஹைன்ஸ் ஹால்...’ குறுங்கதைத் தொகுப்புக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் ’பின்னணிப் பாடகர்’ குறுங்கதைத் தொகுப்புக்கும் பயணி தரன் எழுதியுள்ள மதிப்புரை 'தி இந்து தமிழ் திசை நாளிதழி'ல் (டிசம்பர் 12, 2020) வெளிவந்திருக்கிறது. பார்க்க:...