Perundevi
நிகனோர் பர்ரா (4)
ஒரு மனிதன்
ஒருவனது அம்மா சாகக் கிடக்கிறாள்
அவன் ஒரு மருத்துவரைப் பார்க்கப் போகிறான்
அழுகிறான்
போகும் வழியில் தன் மனைவி
இன்னொருவனுடன் இருப்பதைப் பார்க்கிறான்
அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்
சற்றுத் தொலைவிலிருந்து
மரத்திலிருந்து மரத்துக்குச் சென்று
அவர்களைப் பின்தொடர்கிறான்
அழுகிறான்
தன் இளம்பருவத் தோழன் ஒருவனைப் பார்க்கிறான்
நாம்...
மகாமசானம்
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பன் வீட்டுக்கு வந்திருந்தான். சமீபத்தில் நான் வாசித்த ஒரு தமிழ்ப் புதினம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த ஆக்கம் பெரிதாக என்னைக் கவரவில்லை. ஏனெனில், மொழிவளத்தைக் கையாளும் விவரணைகளில்...
தீபாவளிக்கான சிறப்புச் சிறுகதை
வாசிக்க சுட்டியைச் சொடுக்கவும்.
https://uyirmmai.com/literature/short-story/tamil-short-story-by-perundevi-2/?fbclid=IwAR1ka3rPUEwe5lrgfIlDdRmuOf6GlqicuImXyKMwveXPk9IrolavHSPYNl4
சென்ற ஜூலையில் மறைந்த எழுத்தாளர் சா.கந்தசாமியின் ஒரு சிறுகதை (”பாய்ச்சல்”) எனக்கு ரொம்பப் பிடித்தமானது. அவர் இறந்தபோது அந்தக் கதையை மனதில் வைத்துக்கொண்டு ஒரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன்....
‘கௌரவக்கொலை:’ மாற்றுச் சொல்லாடலுக்கான தேவையும் பால் தன்னிலைகளும்
பகுதி ஒன்று: 'கௌரவக் கொலை' என்னும் மொழிப் பயன்பாடு
தமிழகத்தில் காதலுறவு மற்றும் மணவுறவு சார்ந்து பட்டியலினத்தவருக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறை மற்றும் படுகொலைகள் பற்றிய சொல்லாடல்களை இரு பகுதிகளில் விவாதிக்கிறது...
‘கபாடபுரம்’ என்னும் மிகுபுனைவும் கர்ப்பேந்திரமும்
பயன் கருதாது, தன்மயமாகி, லயித்து, ஒட்டிப் புளுகுவதுதான் கதை.” (சிறுகதை மறுமலர்ச்சிக் காலம், முல்லை (10), 1946) - புதுமைப்பித்தன்
“இந்த வாழ்க்கை அவ்வளவு லேசான கட்டுக்கோப்பில் சிருஷ்டிக்கப்படவில்லை. தர்க்கத்தின் பிரியமான அந்தரங்கமான கொள்கைகளைச்...
வெளியே குருவியைப் பார்த்து நாட்களாகிவிட்டது
மூன்றாவது கிளாஸ் ஒயினில்
குளிர் இரவை மூழ்கடிக்கிறேன் ஜன்னலுக்கு
வெளியே பார்க்கிங்கில் ஒரு கார்
என் பக்கத்து அபார்ட்மெண்டில் வசிப்பவன்
அந்தப் பெண்ணை இதற்குமுன் பார்த்ததில்லை
அவனைவிடக் குள்ளம்
இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்
அந்தப் பெண் கையை ஆட்டி ஆட்டிப் பேசுகிறாள்
கத்துகிறாள்
கண்ணாடி அறைந்த...
பாப் சாந்தி
Odilon Redon, “The Smiling Spider,” 1887
கதவுக்கு வெளியே யாரோ ஸ்விட்சில் வைத்த கையை எடுக்காமல் ஒலிக்கவிட்டிருந்த அழைப்பு மணியின் தொடர் நாராசம் தாங்காமல், பாதிக் குளியலில் வேகவேகமாக நைட்டியை அணிந்தவாறு பாத்ரூமிலிருந்து...
‘காஞ்சனை:’ நவீனத் தன்னிலையின் அல்லாட்டம்
புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் என்னை மிகவும் ஈர்த்தது ‘காஞ்சனை’ சிறுகதைதான். அந்தச் சிறுகதைக்கு என் வாழ்வில் முக்கிய இடமுண்டு. 1995-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தக் கதையைப் பற்றி கலை இலக்கிய விமர்சகரும் கோட்பாட்டாளருமான...
காதலின் சொரூபமாகும் பெண் தன்மை: புதுமைப்பித்தனின் ‘ஆண்மை’ சிறுகதை
(courtesy: "The art of waiting," ignant.com)
புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் ஒன்றான ‘ஆண்மை’யின் தலைப்பே நகைமுரண். கதையின் நாயகன் ஒரு கோழை. அதாவது, நம் ஊரில் இன்றளவும் ஆண்மை, ஆண்மை என்று பறைசாற்றுகிறார்களே அது...
நிகனோர் பர்ரா (3)
இக்கவிதை 1963இல் பிரசுரிக்கப்பட்டது. எதிர்கவிதையின் கொள்கை விளக்கமென்று சொல்லத்தக்க வகையில் அமைந்திருக்கும் கவிதை இது. தந்த கோபுரத்திலிருந்தும் இறை நிலையிலிருந்தும் கவிஞர்கள் இறங்கிவர வேண்டியதை எடுத்துரைக்கும் கவிதை இது.
கொள்கை விளக்க அறிக்கை
சீமான்களே, சீமாட்டிகளே
இது...