Perundevi
தன்னில் அமிழ்ந்து தன்னை அழித்தல்: அபியின் கவிதைகள்
அபியின் கவிதைகள் பொதுவாக நான் வாசிக்கும் கவிதைகளிலிருந்தும் எனக்குரிய கவிதைப் பாணிகளிலிருந்தும் மாறுபட்டவை. பல வகைகளில் எழுதப்படுவது கவிதை என்ற வகையில் கவிதைக்கே உரித்தான பன்மைத்தன்மையின் சிறப்பு இவற்றைப் படிக்கையில் மீண்டும் உறுதிப்பட்டது.
(நிழற்படத்துக்கு...
சில புதிய கவிதைகள்
இப்படி உணர்ந்ததுண்டா?
பழைய ஒருத்தி இறந்துவிட்டாள்
வேறொருத்தி தோன்றிவிட்டாள்
மடிந்து மறைந்த தாழம்பூ
மல்லிகையாகிவிட்டது
வலி தந்த அம்பைப்
பிய்த்தெறிந்தாகிவிட்டது
ஒரு தழும்பு அனாதிகாலத்தின்
கவர்ச்சியோடு
வெற்றுடலில் மினுங்குகிறது
புன்னகைக்கிறாள்
குளித்துமுடித்தவுடன்
கட்டாத முடி முகத்தில் அலையும்
புதிய காட்டின் புன்னகை
ஆம், காதல் இன்னும்
மூச்சுவிடுவதை நிறுத்தவில்லை
மல்லிகைக்குள் புழு ஊர்கிறது
ஒருத்தியிலிருந்து
இன்னொருத்தி பிறக்கும்போது
ஒருவனிடமிருந்து இன்னொருவனும்
பிறக்கத்தான்...
ஆர்.சிவக்குமாரின் ‘உருமாற்றமும்’ மொழிபெயர்ச் சார்பும்
தற்காலத்தில் தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளராகத் திகழும் திரு ஆர். சிவக்குமாரின் ‘உருமாற்றம்’ கதையை முன்வைத்து மொழிபெயர்ப்பு சார்ந்த சில கருத்தாக்கங்களைப் பகிர நினைக்கிறேன். முதலாவது மொழிபெயர்ப்பு என்ற பயன்பாட்டைவிட மொழிபெயர்த்தல் என்ற பயன்பாடு...
கொள்ளை நோய் குறித்த என் கவிதைகள் ஆங்கிலத்தில்
courtesy: The Atlantic
ஸ்க்ரால்.இன் மின்னிதழில் என். கல்யாண ராமனின் மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கும் என் கவிதைகளுக்கான சுட்டி:
https://scroll.in/article/962399/nothing-imagined-is-excessive-eleven-poems-for-and-from-a-world-gripped-by-a-pandemic
மழையின் வீடு
”மனிதனொருவன் உலகத்தை வரைய நினைத்தான். வருடங்கள் செல்ல, வெளியொன்றில் மாகாணங்கள், ராச்சியங்கள், மலைகள், குடாக்கள், கப்பல்கள், மீன்கள், அறைகள், உபகரணங்கள், நட்சத்திரங்கள், குதிரைகள், ஆள்கள் என்று உருவங்களை இட்டு நிரப்பினான். தான் இறப்பதற்குச்...
பெண்களுக்கு சமையலறை ஒதுக்கீடுபோலத்தான் இலக்கியத்திலும் இருக்கிறது!
ஏன் எழுதுகிறீர்கள்?
நிச்சயமாக இலக்கிய வரலாற்றில் இடம் கிடைக்கும் என்பதற்காக எழுதவில்லை. இலக்கிய வரலாற்றைப் பேசும்போது பல இலக்கிய நண்பர்கள் நம்பிக்கையோடு ‘தகுதியுடையது எஞ்சும்’ என்கிறார்கள். சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் வாசிக்கும்போது ஒரு சிலப்பதிகாரம்தானா ஒரு...
காதல்-காத்திருத்தல்
காதலைப் பற்றி எழுத நினைக்கும்போதே உடனடியாக மனதில் தோன்றும் பிம்பம் காத்திருப்பவளின் / காத்திருப்பவனின் பிம்பம். காத்திருத்தலின் செறிவான சித்திரங்களைத் தமிழ் அக இலக்கியம் நமக்குக் காட்டித் தந்திருக்கிறது. பொதுவாக, காத்திருத்தல் எனும்...
நிகனோர் பர்ரா
ரோலர் கோஸ்டர்
அரை நூற்றாண்டாக
சீரியஸ் முட்டாள்களின் சொர்க்கமாக
கவிதை இருந்தது
நான் வந்து
என் ரோலர் கோஸ்டரைக் கட்டும் வரை.
விரும்பினால் மேலே செல்லுங்கள்.
வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும்
ரத்தம் கொட்டிக்கொண்டு
கீழே வந்தீர்கள் என்றால் அது என் தவறல்ல.
வாசிப்புக்கான நோபல் பரிசு
வாசிப்புக்கான நோபல் பரிசை
எனக்குத்...
கவிதைகளின் தீவுக்கூட்டம்: சகவாழ்வை எழுதிய டெரெக் வால்காட்
டெரெக் வால்காட் 1992இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசால் கௌரவிக்கப்பட்ட முதல் கரீபிய இலக்கியவாதி. பரிசுக்கு இரு வருடங்கள் முன்புதான் வால்காட்டின் காவியம் போன்ற கவிதை நூலான ஒமெரோஸ் வெளியாகி விமர்சகர்களாலும் நாளிதழ்களாலும் பாராட்டப்பட்டிருந்தது....
‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ தொகுப்பில் என் முன்னுரை
வாசல்
இந்தத் தொகுப்பிலிருக்கும் குறுங்கதைகள் எல்லாம் இவ்வருடத்தின் (2020) மே மாதத்திலிருந்து தொடங்கி ஜூலை வரையில் கிடைத்த கால அவகாசத்தில் எழுதப்பட்டவை. கொரோனாவின் பிடியில் உலகமே ஸ்தம்பித்துக் கிடக்கும்போது புனைவில் என்னை விரும்பித் தொலைத்த...













